fbpx

ஆண்கள் மற்றும் பெண்கள் எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மையை தரும்.!?

பொதுவாக ஜோதிடப்படி நாம் பிறந்த கிழமை, நட்சத்திரம் போன்ற நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. மேலும் காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலை 5 மணிக்கு பின்பாகவோ எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது நல்லது. தலை முதல் உடல் வரை எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆரோக்கியத்தை தந்தாலும் ஜோதிடப்படி ஒரு சில கிழமைகளில் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிப்பது பல்வேறு நன்மைகளை தரும். அவை என்னென்ன கிழமைகள் என்பதை குறித்து பார்க்கலாம்?

ஆண்கள்
1. இதய பாதிப்பு இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
2. திங்கள் கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது முகம் மற்றும் உடலில் பொலிவை ஏற்படுத்தும்.
3. செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆயுளை குறைக்கும்.
4. புதன் கிழமையில் எண்ணெய் குளியல் செல்வத்தை பெருக்கும்.
5. வியாழக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது குடும்பத்தில் தரித்திரத்தை உருவாக்கும்.
6. வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆண்களுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
7. சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் நீண்ட ஆயுளை பெறலாம்.

பெண்கள்
1. செவ்வாய்க்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளித்தால் பாக்கிய விருத்தி ஏற்படும்.
2. வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் கணவர் நீண்ட ஆயுளை பெற்று சௌபாக்கியவதியாக வாழலாம்.
மற்ற நாட்களில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல.

Rupa

Next Post

குளிர் காலத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பாக இருக்கலாம்.? கண்டிப்பாக மருத்துவரை பாருங்கள்.!?

Sun Jan 21 , 2024
குளிர்காலத்தில் பலருக்கும் அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்ணலாம். ஆனால் குளிர் காலத்தில் சாதாரண சளி, காய்ச்சலை தாண்டி நுரையீரல், இதயம் என பாதிப்பு அதிகமானால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். மேலும் ஒரு சில அறிகுறிகளின் மூலம் மாரடைப்பா இல்லையா என்பதைக் குறித்து அறியலாம் என்று இதய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார். குளிர்காலங்களில் நம் ரத்த நாளங்களில் […]

You May Like