fbpx

வாயு தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்றவைகளால் அவதிப்படுகிறீர்களா..? ஓமத்தை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

அஜீரணக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நம் வயிற்றை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஓமம். சூடான நீரில் இதனை கலந்து சாப்பிடுவதன் மூலம் வாயு தொல்லை நீங்குவதோடு செரிமான சக்தியும் அதிகரிக்கிறது. உடலுக்கு பல நன்மைகளைத் தரும் ஓமத்தில் புரதச்சத்து கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பு சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன.

மேலும் ஓமத்தில் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற கனிம சத்துக்களும் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இது நம் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடும் சக்தியை உடலுக்கு தருகிறது. மேலும் உடலில் ஏற்படும் அஜீரணக் கோளாறை சரி செய்வதில் ஓமம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஓமத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நம் உடலில் கொழுப்புக்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக ஓமத்தை பயன்படுத்தும் போது நம் உடலுக்கு கொழுப்புகளால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் ஓமத்தில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாயு தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமம் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சூடான நீரில் ஓமம் கலந்து சாப்பிட்டு வர அஜீரணத் தொல்லை நீங்கும். மேலும் இது வாயு தொல்லையையும் சரி செய்கிறது. நம் வயிற்றின் செரிமான தன்மையை அதிகரித்து வயிற்று உபாதைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

ஓமத்தில் இருக்கக்கூடிய மினரல்கள் இருமலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் ஓமம் நம் சுவாச உறுப்புகளின் இயக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை நுரையீரலின் செயல்பாடு அதிகரித்து உடலுக்கு தேவையான ஆக்சிஜன் நுரையீரலுக்கு கிடைக்க வழி செய்கிறது. ஓமத்தின் மற்றும் ஒரு முக்கியமான நன்மைகளில் ஒன்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதாகும். ஓமத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சீராக இருக்கும்.

Kathir

Next Post

10,11 & 12-ம் வகுப்பு மாணவர்களே ரெடி...! இன்று காலை 9.30 மணிக்கு பொது தேர்வு அட்டவணை...!

Thu Nov 16 , 2023
தமிழ்நாடு மாநிலக் பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அட்டவணையை வெளியிட உள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; 2023 – 2024-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / […]

You May Like