fbpx

அடிக்கடி நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதனால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா.!?

மருத்துவ குணநலன்கள் அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது பல்வேறு நோய்களை தீர்க்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் நெல்லிக்காயை கடித்து சாப்பிட முடியாதவர்கள் நெல்லிக்காய் ஜூஸாக குடித்து வரலாம். இதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம். இதன் மூலம் உடலில் நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் போன்ற சத்துக்களை அதிகப்படுத்தி செரிமானத்தை சரி செய்கிறது. மலச்சிக்கலை தீர்க்கிறது.

2. கல்லீரல் பாதிப்பு – நெல்லிக்காய் ஜூஸ் அடிக்கடி குடித்து வருவதன் மூலம் கல்லீரல் பாதிப்பில் இருந்து விடுபடலாம். மஞ்சள் காமாலை நோய் பாதிப்படைந்தவர்களுக்கு கல்லீரல் வீக்கமாக இருக்கும். இவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

3. உடல் எடை குறைய – தற்போதைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பது மிகப்பெரும் பிரச்சனையாக பலருக்கும் இருந்து வருகிறது. அப்படி இருப்பவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடை வேகமாக குறைய வழிவகுக்கும்.

4. நோய் எதிர்ப்பு சக்தி – சளி, இருமல், காய்ச்சல் என அடிக்கடி நோய் பாதிப்புக்குள்ளாகிறீர்களா? அப்படியானால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் உடலில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகப்படுத்தி நோய் கிருமிகளை தடுக்கிறது.

Rupa

Next Post

இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மேற்கு வங்க நகரம்...!

Sat Jan 13 , 2024
இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மேற்கு வங்க நகரங்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர தூய்மை கணக்கெடுப்பான ‘ஸ்வச் சர்வேக்ஷன்’ படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா இந்தியாவின் அசுத்தமான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அசுத்தமான நகரங்களில் 10 இடங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை.ஹவுராவுக்கு அடுத்தபடியாக கல்யாணி, மத்தியகிராம், கிருஷ்ணாநகர், அசன்சோல், ரிஷ்ரா, பிதான்நகர், கான்ச்ரபாரா, கொல்கத்தா மற்றும் பட்பாரா […]

You May Like