fbpx

குழந்தைகள் அதிபுத்திசாலியாக வளர, இந்த ஒரு பொருளை மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க.!

பொதுவாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தானதாகவும், சுவையானதாகவும் உணவுகளை கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஊட்டச்சத்தானதாக குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையில்லாமல் இருப்பதால் அத்தகைய உணவுகளை உண்பதற்கு மறுக்கின்றனர். ஊட்டச்சத்தானதாகவும், சுவையானதாகவும் நிறைந்த இந்த ஒரு உணவு பொருளை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

அதாவது ஊட்டச்சத்து நிறைந்த சுவையான அக்ரூட் பருப்புகள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருந்து வருகிறது. இந்த அக்ரூட் பருப்பு சிறியதாகவும், முறுமுறுப்பாகவும் இருப்பதால் குழந்தைகளும் இதை விரும்பி உண்னு வருகின்றனர்.

குறிப்பாக தேர்வு நேரங்களில் இந்த அக்ரூட் பருப்பை குழந்தைகளுக்கு தினமும் காலையில் சாப்பிட கொடுத்து வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும். மேலும் குழந்தைகள் மகிழ்ச்சியானவர்களாகவும், புத்திசாலியானவர்களாகவும் வளர இந்த அக்ரூட் பருப்பு சிறந்த ஒரு உணவு பொருளாக இருந்து வருகிறது.

இந்த அக்ரூட் பருப்பில் ஒமேகா-3, நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை அதிகமாக இருப்பதால் மூளைகளுக்கு செல்லும் நரம்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து குழந்தைகளை வலிமை மிக்கவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் மாற்றுகிறது. மேலும் இதயம் மற்றும் எலும்புகளையும் வலுப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய இந்த அக்ரூட் பருப்பை தினமும் குழந்தைகளுக்கு அளித்து வருவது பல்வேறு நன்மையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Rupa

Next Post

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பீர்க்கங்காய்.! வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!

Thu Feb 1 , 2024
பொதுவாக காய்கறிகள் என்றாலே நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த வகையில் குறிப்பாக பீர்க்கங்காயை நம்மில் பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதில்லை ஆனால் பீர்க்கங்காயில் பல்வேறு நோய்களை தீர்க்கும் நன்மைகள் இருந்து வருகின்றன. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்? பீர்க்கங்காய் செடியில் உள்ள இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவ குணம் […]

You May Like