fbpx

மஞ்சள் காமாலையை சரி செய்யும் பாகற்காய்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பு சுவையின் காரணமாக இதை பலரும் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் பாகற்காயில் பல்வேறு வகையான சத்துக்களும், நோயை தீர்க்கும் ஆற்றலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பாகற்காய் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்.

1. பாகற்காயை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் சரியாகும்.
2. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கபம், வாதம், பித்தம் போன்ற நோய்கள் தீரும்.
3. மேலும் வயிற்றுப் புண்கள், வயிற்றுப் பூச்சி போன்றவை நீங்கும்.
4. பாகற்காய் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக பயன்பட்டு வருகிறது.
5. வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள பாகற்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் ஏற்படும் காயங்கள், புண்கள் போன்றவற்றை சரி செய்கிறது.
6. பாகற்காய் சாப்பிடுவதால் பசி அதிகரித்து, வயிற்றில் அமிலங்கள் தேவையான அளவு சுரப்பதன் மூலம் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.
7. பாகற்காயை சாப்பிடுவதால் பருக்கள், சரும தொற்றுகள், தோல் நோய்கள், தழும்புகள் போன்றவை சரியாகும்.
8. பாகற்காயில் உள்ள வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நோயை கட்டுப்படுத்துகிறது.
9. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும்,  இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் வழிவகை செய்கிறது.
இவ்வாறு பல்வேறு சத்துக்களை கொண்ட பாகற்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நோய்கள் குணமாகும்.

Rupa

Next Post

சில நிமிட சூரிய நமஸ்கார வழிபாடு.. இவ்வளவு நன்மைகளை உடலுக்கு தருகிறதா.! ஆச்சரிய தகவல்.!

Thu Jan 18 , 2024
இந்து மத வாழ்வியல் முறையில் அடிப்படை விஷயங்களில் ஒன்றாக இருந்து வந்தது சூரிய நமஸ்கார வழிபாடு. இது ஆகம ரீதியான நன்மைகள் என்று கூறப்பட்டாலும் அறிவியல் ரீதியாக நமது உடலுக்கு நிறைய நன்மைகளை வழங்கக்கூடிய விஷயம் என்றால் நம்ப முடிகிறதா.? இந்து மதப் படி சூரியன் கடவுளாக வணங்கப்படும் ஒரு விஷயம். சூரிய பகவான் வெப்பமானவராக உஷ்ணத்தை வெளிக்கொண்டு வரக்கூடியவராக கருதப்பட்டாலும் உலகத்தில் உயிர்கள் வாழ முக்கியமான விஷயமாக இருப்பவர். […]

You May Like