அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சோளத்தை முக்கிய உணவாக உண்டு நீண்ட ஆயுள் வாழ்ந்து வந்தனர். தற்போதைய காலகட்டத்தில் கிடைக்கும் மஞ்சள் நிற சோளம் மற்றும் இனிப்பு சோளம் இவற்றில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை விட நாட்டு சோளமான வெள்ளை சோளத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவற்றையே உணவாக நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். ஒரு சில கிராமங்களில் தற்போதும் நம் நாட்டுச் சோளமான வெள்ளை சோளத்தை உணவாக உட்கொண்டு வருகின்றனர்.
வெள்ளை சோளம் அரிசியை விட அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், கொழுப்பு சத்து, கரோட்டின், தயமின், ரிபோப்லோமின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமாக உள்ளதால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.
வெள்ளைச் சோளத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமான மண்டலத்தை சரி செய்து அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை சீர்படுத்துகிறது. எனவே வெள்ளை சோளம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயத்தில் ஏற்படும் அடைப்பு சரி செய்து இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவை குறைப்பது, எலும்புகளை பலப்படுத்துவது, அலர்ஜி, அரிப்பு, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை சரி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்வது போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை தீர்த்து உடலை வலுப்படுத்துகிறது. இதனாலேயே நம் முன்னோர்கள் சோளத்தை முக்கிய உணவாக எடுத்து வந்தனர்.