fbpx

ஆண்மை குறைவை போக்கும் டார்க் சாக்லேட்.! வேறு என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா.!?

பொதுவாக சாக்லேட் என்றாலே உடல் நலத்திற்கு கேடு என்று சொல்வதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த டார்க் சாக்லேட் வகைகள் அதிகமாக சாப்பிடும் போது உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்களும் இதை சாப்பிட சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

மனதளவிலும், உடலளவிலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தக் கூடியது டார்க் சாக்லேட். டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோவில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள், பிளவனாய்டுகள், பாலிபினாலிக் போன்ற உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

1.  டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மூளைக்கு செல்லும் நரம்பின் செயல்பாடுகளை அதிகரித்து மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தோலில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.
3. மன அழுத்தம், மனப்பதட்டம், குழப்பம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட டார்க் சாக்லேட்டை தினமும் சாப்பிட்டு வருவது பலன் அளிக்கும்.
4. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
5. குழந்தைகளுக்கு சாதாரண சாக்லேட் தருவதற்கு பதில் டார்க் சாக்லேட் தருவது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
6. குறிப்பாக ஆண்களுக்கு விந்தணு பிரச்சனையை சரி செய்து தாம்பத்திய உறவில் நன்றாக செயல்படுவதற்கு இந்த டார்க் சாக்லேட் பெரிதும் உதவி புரிகிறது. ஆனால் இந்த டார்க் சாக்லேட்டிலும் ஒரு சில நோயை ஏற்படுத்தும் பண்புகள் இருப்பதால் இதனையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பதையும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்” என்ற பழமொழியை மனதில் கொண்டு அளவோடு சாப்பிட வேண்டும்.

Rupa

Next Post

கஷ்டங்களை அழித்து நம்மை காக்கும் கணபதியின் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்க.!?

Sun Feb 4 , 2024
பொதுவாக விநாயகரை வழிபட்டு எந்த ஒரு செயலையும் தொடங்குவது அந்த செயல் நல்லபடியாக முடியும் என்பதற்காகவே. அப்படியிருக்க மாதந்தோறும் வரும் சங்கடகர சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டு குறிப்பிட்ட மந்திரங்களை சொல்வது வாழ்க்கையில் கஷ்டங்களை குறைத்து மகிழ்ச்சியை பெருக்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சங்கடகர சதுர்த்தியில் கோயில்களில் விசேஷமான பூஜைகளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெறும். அன்றைய நாட்களில் நாம் விநாயகரை வழிபடுவது நம் வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சியை […]

You May Like