பொதுவாக கிழங்கு வகைகளில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த கிச்சிலி கிழங்கு என்று அழைக்கப்பட்டு வரும் கிழங்கில் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கிழங்கு என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை குறித்து பார்க்கலாம்?
கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கு என்று பல பெயர்களில் சொல்லப்படும் கிச்சிலி கிழங்கு தமிழ்நாட்டில் அதிகமாக விளைந்தாலும் வடநாடு மற்றும் வெளிநாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வடநாட்டில் இந்த கிச்சிலி கிழங்கை ஊறுகாயாக செய்து வருடம் தோறும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் தினமும் சமைக்கும் உணவுகளில் மசாலாவாக இதை சேர்த்துக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு நன்மைகள் பல இந்த கிழங்கில் உள்ளது.
இந்த கிச்சிலி கிழங்கில் குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருப்பதால் இது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோயை வளர விடாமல் தடுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோயை குணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த கிழங்கை அரைத்து சாறாகவும், தேநீரில் கலந்தும், சூப்பாகவும் குடித்து வந்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் இந்த கிச்சிலி கிழங்கை காயவைத்து பொடி செய்து தூளாக எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது தேநீரில் அல்லது சூப் செய்து கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்து வந்தால் ஆஸ்துமா, சளி இருமல், மூச்சு விட சிரமப்படுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துகிறது. இந்த கிழங்கில் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது என்று வல்லுனர்களும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.