பலருக்கு பாதங்களில் எப்போதும் வெடிப்பு இருக்கும். என்ன தான் சுத்தமாக வைத்து, பல கிரீம்களை தடவினாலும் பாதம் பொலிவாக இருக்காது. எப்போதும் வறட்சியாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர்காலம் என்றால், வெடிப்பும் வறட்சியும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள், தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை பாதங்களில் தடவி வந்தால் போதும். சாப்பிடும் நெய்யை காலில் தடவுவதா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் நீங்க அதிக காசு கொடுத்து வாங்கும் கிரீம்களை விட, நெய் உங்களுக்கு நல்ல தீர்வை தரும். பொதுவாகவே நாம் பாதங்களை மசாஜ் செய்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் பாதங்களுக்கு மட்டும் இன்றி, முழு உடலுக்கும் பல நன்மைகளை தரும்.
அந்த வகையில், நெய்யை வைத்து மசாஜ் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆம், உண்மை தான். பாதங்களில் இருந்து உடலுக்கு வரும் பலவிதமான பிரச்சனைகள் வராமல் தடுக்க இது உதவுகிறது. குறிப்பாக, இரவில் தூங்க செல்வதற்கு முன் பாதங்களுக்கு நெய் மசாஜ் செய்தால், நரம்புகள் நல்ல ரிலாக்ஸ் ஆகி ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். ஒரு வேலை நெய்யின் விலை அதிகம், எங்களால் சாப்பிடவே நெய் வாங்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், நெய்க்கு பதில் நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.