fbpx

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ பாயில் படுத்து தூங்குங்க..

நாகரீகம் என்ற பெயரில், பல விஷயங்கள் மாறிக்கொண்டே உள்ளது. அந்த வகையில் நாம் மறந்து போன ஒரு அற்புதமான விஷயம் தான் பாயில் படுத்து உறங்குவது. தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் பலர் கட்டில் மற்றும் மெத்தையில் தான் தூங்குகிறார்கள். இதனால் நமது உடலுக்கு கிடைக்கும் பல நன்மைகள் தடைப்பட்டு விடுகிறது. வசதி இல்லாதவர்கள் தான் பாயில் படுப்பார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் எல்லாம் பாயில் படுத்து உறங்குவது நல்லது. இதற்காக நீங்கள் பிளாஸ்டிக் பாயை பயன்படுத்தக்கூடாது. இயற்கை முறையில் தயாரிக்கும் பாய்களில் படுத்து உறங்குவதால் தான் நன்மைகள் கிடைக்கும்.

பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வு. ஆம், மேலும் பாயில் படுத்து உறங்குவதால் இடுப்பு எலும்புகள் விரிவடைந்து சுகப்பிரசவத்துக்கு பெரிதும் வழிவகுக்கும். மேலும், உடல் சூட்டை குறைக்க கோரைப் பாய் மிகவும் உதவும். கோரப் பாய், உடலுக்கு நல்ல குளிர்ச்சி தருவதால், நல்ல உறக்கம் கிடைக்கும். மேலும் இதனால் உடல் சோர்வு, காய்ச்சல், மந்தம் போன்ற பல பிரச்னைகளை தடுக்கிறது.

இன்று பலர், தங்களின் குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதில்லை. ஆனால் அது தவறு. குழந்தைகளை பாயில் படுக்க வைப்பதால் கழுத்தில் சுழுக்கு பிடிக்காது. மேலும், குழந்தையின் முதுகெலும்பு சீராகும். பொதுவாக 60 வயதிற்கு மேல் உடலில் ரத்த ஓட்ட பிரச்னை ஏற்படும். ஆனால், பாயில் படுத்து உறங்குவதால் ரத்தம் சீராக பாய்ந்து, உடலில் உள்ள கொழுப்பு குறையும். கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் பாய் அளிக்கும் என்பதால், நீங்கள் குளிர் காலத்திலும் பாயில் தூங்கலாம்.

Read more: ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன், கட்டாயம் இதை செய்யுங்க.. இல்லேன்னா பல பிரச்சனை வரும்..

English Summary

benefits-of-sleeping-in-mat

Next Post

உலக செஸ் சாம்பியன்ஷிப்!. சாம்பியன் பட்டத்தை நெருங்கிய தமிழக வீரர்!. 11வது சுற்றில் குகேஷ் வெற்றி!

Mon Dec 9 , 2024
World Chess Championship: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 11 ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை பெறும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக உள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். […]

You May Like