இளநீர் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய ஒரு பானம் ஆகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் இது உடலின் சூட்டை போக்கி உடலை குளிர்ச்சி அடைய செய்யும். இளநீரில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அவற்றை எப்போது குடிப்பது என்பது தொடர்பாக ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.
இளநீரில் நம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் புரதங்கள் மற்றும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற மினரல்களும் நிறைந்துள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி காலை 10 மணிக்கு இளநீர் குடிப்பது சிறந்ததாகும். காலை வேளையில் இளநீர் குடிப்பதன் மூலம் நமது உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சோடா அல்லது சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களுக்கு பதிலாக இளநீர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் கிடைக்கிறது. இளநீர் நம் உடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர்ச்சத்து நம் சருமங்கள் பராமரிப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. காலையில் உடற்பயிற்சி செய்து வருபவர்கள் இளநீர் குடிப்பதன் மூலம் உடற்பயிற்சியின் போது இழந்த ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது.
இளநீர் குடிப்பதால் உடல் உஷ்ணம் குறைகிறது. இதன் காரணமாக உடல் குளிர்ச்சி அடைவதோடு பல்வேறு நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை முறையில் எலக்ட்ரோலைட் நம் உடலுக்கு வழங்குவதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் காரணமாக நமது உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கிறது.
இளநீர் பொட்டாசியம் சத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம். இளநீரில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியத்தால் அவர்களது சிறுநீரக பாதிப்பு மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சிலர் இளநீரை இரவு தூங்குவதற்கு முன் குடிப்பதன் மூலம் நல்ல உறக்கம் கிடைக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.