பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனமான Smallest AI, முழுநேர பொறியாளராகப் பணியாற்ற ஆட்கள் தேவை என்று அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்மால்லஸ்ட் ஏஐ (Smallest AI) என்ற ஸ்டார்ட்அப் கம்பெனியின் நிறுவனர் சுதர்சன் காமத் இது குறித்த அறிவிப்பைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கள் நிறுவனத்திற்கு ஃபுல்-ஸ்டாக் இன்ஜினியரை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பளம் : தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய் ஊதியம் தரப்படும் என்றும், பேசிக் பே ஆண்டுக்கு ரூ.15- ரூ.25 லட்சம், ஊழியர்களுக்கான நிறுவன பங்குகள் ஆண்டுக்கு ரூ.10 – ரூ.15 லட்சம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அனுபவம் வேண்டாம் : இந்த பணிக்கு அனுபவம் தேவை இல்லை.. பொதுவாக கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் இதுபோல தான் டிகிரி இல்லை என்றாலும் கோடிங் ஸ்கில் இருந்தால் வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். அதுபோல வேலைக்கு ஆள் எடுக்கவே பெங்களூர் ஸ்டார்ட் அப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? வழக்கமாக அனுப்பும் ரெஸ்யூமுக்கு பதிலாக, விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றி 100 வார்த்தைகளில் சுய அறிமுக குறிப்பை அனுப்ப வேண்டும். மேலும், அவர்களின் சிறந்த பிராஜக்ட்களை இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்குத் தேர்வாகும் நபர் இந்திரா நகரில் பணியாற்ற வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள் நேரில் வந்து வேலை செய்ய வேண்டும். வேலைக்குத் தேர்வானால் உடனடியாக பணிக்குச் சேர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Read more: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீது ஏற்பட்ட ஆசை; 4 பேர் செய்த காரியத்தால் பரபரப்பு..