சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில், சுமார் 80 மில்லியன் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 135 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, உடல் உழைப்பு இல்லாதது தான்.
பலருக்கு சர்க்கரை நோயின் தீவிரம் குறித்து தெரிவது இல்லை. இதனால், அவர்கள் தாங்கள் நினைத்த உணவுகளை எல்லாம் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த சர்க்கரை வியாதி உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக, சிறுநீரக நோய்கள், நரம்பு கோளாறுகள், இதய நோய்கள், தைராய்டு பிரச்சினைகள், பல் பிரச்சினைகள் மற்றும் உறுப்பு நீக்கம் கூட சர்க்கரை நோயால் ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிக்கு கொடுக்கும் முதல் வைத்தியமே, சர்க்கரையைக் குறைப்பதுதான். இதற்காக காபி, டீயில் சர்க்கரை இல்லாமல் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. காப்பி டீயில் போடுகிற சர்க்கரை எல்லாம் ரொம்ப கம்மி. அதனால் எல்லாம் ரத்தத்தில் சர்க்கரை ஏறுவது இல்லை. ஆனால், இட்லி, தோசை, சோறு, சப்பாத்தி, பொங்கல், ரவா தோசை, ரவா உப்புமா என்று நாம் அன்றாடம் சாப்பிடுகிற உணவுகளால் தான் சர்க்கரை ஏறுகிறது.
பொதுவாக, காலை முதல் இரவு வரை நாம் சாப்பிடுகிற உணவில், 50% தான் மாவுப்பொருள் இருக்க வேண்டும். ஆனால் நாம் இப்படி இட்லி,தோசை,சோறு போன்ற உணவுகளை மட்டுமே அதிகம் சாப்பிடுவதால் 80-90% மாவுப்பொருள் மட்டும் தான் உள்ளது. இதனால் தான், இந்தியாவில் மிகவும் பொதுவாக சர்க்கரை நோய் பிரச்னை இருக்கிறது. இதை குறைக்க, காலையில் 2 முட்டையும் பாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது பயறுவகைகள், பழம் ஏதாவது சாப்பிடலாம். இல்லையென்றால், கொஞ்சம் தயிர் மட்டுமே சாப்பிடலாம். மதியத்துக்கு கீரை, காய்கறி, தயிர் சாப்பிடலாம். வேண்டும் என்றால், ஒரு ஓரத்தில் சிறிது சாதம் வைத்துக்கொள்ளலாம். இரவு உணவாக, சுண்டல், பச்சை பட்டாணி, நவதானியங்கள் அவிச்சது, ஆகியவை சாப்பிடலாம். ஆனால் இட்லி, தோசை சாப்பிடக் கூடாது. , சோறு சாப்பிடுவது கிடையாது.
இதற்கு இடையில் பசித்தால், வெள்ளறிப் பிஞ்சு, கேரட், தேங்காய் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். இதை பின்பற்றுவதால், கண்டிப்பாக சர்க்கரை அளவு குறையும். சுகருக்காக 2 மாத்திரை போட்டவர்கள், இந்த டயட்டை பின்பற்றி மாத்திரையை நிறுத்திவிட்டு சர்க்கரையே இல்லாமல் இருக்கிறார்கள் என்று டாக்டர் பி.ஆர்.ஜே. கண்ணன் கூறியுள்ளார்.
Read more: வயதானாலும் இளமையாக தெரிய வேண்டுமா? அப்போ மிளகை இப்படி சாப்பிடுங்க.. எல்லோரும் அசந்து போயிடுவாங்க.