fbpx

லீவ் முடிஞ்சு ஹாஸ்டலுக்கு போறீங்களா? வீட்டு சாப்பாட மிஸ் பண்ணாம இருக்க, இந்த தொக்கை எடுத்துட்டு போங்க.

தக்காளித் தொக்கு பிடிக்காதவர்கள் யாரவது இருக்க முடியுமா? பிடிக்காத இட்லி கூட தக்காளி தொக்கு இருந்தால் சாப்பிட்டு விடலாம். குறிப்பாக ஹாஸ்டளில் இருப்பவர்களுக்கு அமிர்தம் என்றால் அது வீட்டில் இருந்து அம்மா செய்து கொடுத்து விடும் தக்காளி தொக்கு தான். ஆனால் நாம் கொண்டு போகும் தொக்கை பெரிய கூட்டமே சாப்பிட்டு ஒரே நாளில் சாப்பிட்டு முடித்து விடுவார்கள். ஆனால் அம்மா கையால் சுவையாக சாப்பிட்டு பழக்கப்பட்ட நமக்கு தொக்கு இல்லாமல் சாப்பிடுவது கஷ்டம். அப்படி நீங்கள் இனி கவலை பட வேண்டாம். இந்த தக்காளி தொக்கை பக்குவமாய் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. முக்கியமாக பேச்சிலர்ஸ்க்கு இதனை செய்வது எப்படி என்று தெரிந்து வைத்து கொண்டால், பத்தே நிமிடத்தில் நல்ல ருசியான உணவை சாப்பிட்டு விடலாம். இப்போது, ருசியான தக்காளி தொக்கை பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுவோம்.

​​​​​ செய்முறை: முதலில் அடி கனமான பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய 5 தக்காளியை சேர்த்து விடுங்கள். தக்காளியை நன்கு கிளறிய பிறகு, அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து 10 அல்லது 15 நிமிஷம் மூடி போட்டு விடுங்கள். மிதமான சூட்டில் இது ஒரு பக்கம் கொதித்து கொண்டு இருக்கட்டும். இப்போது, மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துவிடுங்கள். அது சூடு தனிந்ததும் ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் கொதிக்க வைத்த தக்காளித் தொக்கில் நீர் வற்றியதும், மற்றொரு தாளிப்பு கரண்டியில் 5 தேக்கரண்டி நல்லெண்ணெய், கடுகு 1 ஸ்பூன், வெள்ளை உளுந்து 1 ஸ்பூன் போட்டு பொறிந்ததும் அதில் சிறிது பெருங்காயம், 2 கொத்து கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.

இறுதியில் நன்றாக நறுக்கிய 5  பல் பூண்டு சேர்த்து பொறிந்ததும் அதை தக்காளித் தொக்கில் சேர்த்துவிடுங்கள். இறுதியில், நாம் வறுத்து அரைத்து வைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து கிளறி விட்டால், சுவையான தக்காளித் தொக்கு ரெடி. இந்த தக்காளித் தொக்கை காற்றுப் புகாத கண்ணாடி பாத்திரத்தில் மூடி வைத்தால், 20 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

Read more: பல நாளா சரியா மலம் கழிக்க முடியாம அவதிப்படுறீங்களா? இதை மட்டும் செய்யுங்க.. கொஞ்ச நேரத்துல உங்க மொத்த வயிறும் சுத்தமாகும்..

English Summary

best home food for hostellers

Next Post

தங்கம் வீட்டில் தங்கவில்லையா..? இந்த பரிகாரங்கள் செய்தால் ஸ்வர்ண தோஷம் உடனடியாக நீங்கும்..!!

Sat Jan 18 , 2025
Gold does not stay at home..? By doing these remedies, Swarna Dosha will be removed immediately

You May Like