வயது சற்று அதிகரிக்கும் போது பலர் சந்திக்கும் பிரச்சனை என்றால் அது கால் வலி தான். தற்போது உள்ள காலகட்டத்தில், 30 வயதை தாண்டினாலே கால் வலி வந்து விடுகிறது. இதனால், பலருக்கு காலை மடக்கி கீழே உட்கார முடிவதில்லை, உட்கார்ந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை. ஆனால் இது போன்ற பெலவீனங்களை நாம் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. நமது தினசரி வேலைகளை செய்வதற்கு நமது கால்கள் கட்டாயம் வலுவாக இருக்க வேண்டும்.
இதனால் நாம், முடிந்த வரை தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். பெரும்பாலான மக்களுக்கு கால்கள் தான் அதிக பலவீனமான உள்ளது. இதனால் தான் பலர் எப்பொழுதும் சோர்வாகவே இருக்கிறார்கள். இதற்காக கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. உணவே மருந்து என்பதற்கு ஏற்ப நாம் அன்றாட உணவு மூலமாக நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
அதற்கு பதில், மருந்தை உணவாக நாம் சாப்பிடும் போது, உடலில் கூடுதலாக பல பாதிப்புகள் ஏற்படும். இதனால், பலவீனமாக இருக்கும் உங்களது கால்களை பலப்படுத்த உடற்பயிற்சியுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில், உங்கள் கால்களை பலப்படுத்த பாதாம் உங்களுக்கு பெரிதும் உதவும். ஆம், பாதாமில் புரதம், கால்சியம், ஆக்சிஜனேற்றிகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது உங்களது கால்களுக்கு புது உயிரை கொடுக்கும்.
சிக்கன் சாப்பிடுவதால் உங்களது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற பொய்யான கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. சிக்கன் சாப்பிடுவதால், பலவீனமாக இருக்கும் உங்களது கால்களை வலுப்படுத்தும் ஒரு சத்தான உணவாகும். குறிப்பாக சிக்கனின் மார்பகப் பகுதி உங்களுக்கு பெரிதும் உதவும். நீங்கள் அசைவ உணவுகளை சாப்பிடுபவராக இருந்தால் இது ஒரு சிறந்த தேர்வு.
கோழியின் மார்பு பகுதியில் கொழுப்பு குறைவாக இருப்பது மட்டும் இல்லாமல், போதுமான அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இதனால் பலவீனமான உங்கள் கால்கள் கட்டாயம் வலுப்படும். ஒருவேளை உங்களுக்கு சிக்கன் பிடிக்காது அல்லது அசைவ உணவுகளை சாப்பிடாதவர் என்றால் டோஃபு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஆம், புரதத்தின் சிறந்த மூலம் என்றால் அது டோஃபு தான். பலவீனமாக இருக்கும் உங்களது கால்களை வலிமையாக்க, இதை விட சிறந்த சைவ உணவு இருக்க முடியாது..