பொதுவாகவே வந்த நோய்களுக்கு எல்லாம் கண்ட மாத்திரைகளை சாப்பிடாமல் நமது வீட்டு வைத்தியத்தை கடைபிடித்தால் பல பிரச்சனைகளை நாம் தவிர்க்கலாம். ஆம், மாத்திரைகளை நாம் சாப்பிடும் போது நோய் விரைவாக குணமானாலும் அதன் பக்கவிளைவுகள் கடுமையாக இருக்கும். அதே சமயம், நாம் வீட்டு வைத்தியத்தை பின்பற்றும் போது நோய் குணமாக சற்று தாமதம் ஆனாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது.
இன்னும் சொல்லப்போனால் வீட்டு வைத்தியம் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும். அந்த வகையில், உடல் உபாதைகளை குணமாக்க பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகை என்றால் அது தூதுவளை தான். தூதுவளையின் அனைத்து பாகங்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும். ஆம், இதன் இலைகள் மட்டும் இல்லாமல் பூக்களும் பல மருத்துவக் குணங்களைக் கொண்டது.
தூதுவளை இலை, தொண்டை வலி, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். இதற்கு தூதுவளை இலைச் சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். அது மட்டும் இல்லாமல், இந்த தூதுவளை இலை ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினைகளை குறைக்கும். மேலும், தூதுவளை இலையின் சாறு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
இரத்தசோகை உள்ளவர்கள் இந்த இலைகளின் சாறை குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், இந்த சாறு குடல் புழுக்களை அகற்றி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. என்ன தான் தூதுவளை இலையில் பல நன்மைகள் இருந்தாலும், அதிக அளவில் உட்கொண்டால் வயிற்று புண் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் வயிற்று போக்கு, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளும் வரலாம்.
Read more: கஷ்டப்படாம உடல் எடையை சட்டுன்னு குறைக்கனுமா? அப்போ இந்த பொருளை தினமும் மென்று சாப்பிடுங்க..