மூல நோய் உயிர்கொல்லி நோயல்ல எனினும் மிக கடுமையான வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல வகையில் தீர்வு தேடி அலைகின்றனர். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு முடக்க்கத்தான் கீரை.
பொதுவாக கீரை வகைகள் பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக அமைகிறது. அதிலும் முடக்கத்தான் கீரையில் கால்சீயம், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளது. இது மூல நோயையும் எளிதில் சரி செய்யும் திறன் கொண்டது. முடக்கத்தான் கீரையை கொண்டு தோசை, இட்லி, சூப் என பல்வேறு உணவுகள் செய்ய முடியும்.
இதில், சூப் அனைவரும் விரும்பும் ஒரு சிறந்த உணவாக உள்ளது. இதற்கு வானொலியில் சிறுது விளக்கெண்ணெய் ஊற்றி அலசி வைத்த கீரையை போட்டு வதக்கி பின்பு அதில் சிறிதளவு சீரகப்பொடி, உப்பு சேர்த்து ஒரு கப் நீரில் நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நீரை வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் சூப் தயார். இதனை மூல நோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வர ஆசனவாயில் இருக்கும் புண்கள் ஆறும். அரிப்புகள் நீக்கும். முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவதால் மூல நோய் விரைவில் குணமடையும்.