தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பிசிஓடி தான். திருமணமான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதால் தான், கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. பிசிஓடி என்பது, சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் சரியான வளர்ச்சி பெற்று சினைப்பையில் இருந்து வெளிவராமல், அது சினைப்பையின் வெளியில் நீர்க்கட்டிகள் ஏற்படும்.
இவ்வாறு உருவாகும் நீர்க்கட்டிகள், உடலில் இன்சுலினை அதிகமாக சுரக்க வைக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முகத்தில் முடி வளர்வது, முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிசிஓடி பிரச்சனையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட காரணம், ஓடியாடி விளையாடாமல் இருப்பது, ஜங்க் உணவுகள் சாப்பிடுவது, தூக்கமின்மை, வயிற்று பகுதிக்கு அருகே கேட்ஜெட்டுகளின் பயன்பாடு போன்றவை தான்.
இந்த பிசிஓடி பிரச்சனை கொண்ட பெண்கள் ம்க்ருதுவரை அணுகும் போது, மருத்துவர்கள் அதிகமான மருந்து மாத்திரைகளை கொடுப்பது உண்டு. இந்த மாத்திரைகளால், பக்கவிளைவுகள் ஏற்பட அதிக வாய்புகள் உள்ளது. ஆனால் இந்த பிசிஓடி பிரச்சனைக்கு மாத்திரை இல்லாமல் அக்குபஞ்சர் மூலம் சரி செய்து விடலாம் என்று அக்குபஞ்சர் நிபுணர் டாக்டர்.எம். ஆனிஷா சபிகா கூறியுள்ளார்.
இதனால், பிசிஓடி பிரச்சனை இருக்கும் பெண்களையும் கருத்தரிக்க வைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். அக்குபஞ்சர் என்பது, நமது உடலில் உள்ள 361 புள்ளிகளை தூண்டிவிடும் ஒரு சிகிச்சை முறை தான். இந்த முறையால், எந்த நோயாக இருந்தாலும் அதை சரிசெய்துவிடலாம். பொதுவாக, உடல் சூட்டினால் ஏற்படும் இந்த பிரச்சனையை குணமாக்க உடலில் உள்ள குளிர்ச்சியான புள்ளிகளை தூண்ட வேண்டும்.
இதனால் நீர்க்கட்டிகள் கரைவது மட்டும் இல்லாமல், உடல் எடையைக் குறைக்கவும், ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யவும் முடியும். ஆரம்பத்திலேயே பிசிஓடி பிரச்சனைக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டால், குறுகிய காலத்தில் இப்பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமாகலாம் என்றும் ஆனிஷா கூறியுள்ளார்.