பொதுவாக நமது முன்னோர் பல ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினர். அதன் விளைவாக, அவர்கள் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருந்தனர். ஆனால் நாம் நாகரீகம் என்ற பெயரில், பல நல்ல பழக்கங்களை விட்டு விட்டோம். அந்த வகையில் நமது முன்னோர் பின் பற்றிய ஒரு பழக்கம் என்றால் அது எண்ணெய் தேய்த்து குளிப்பது தான். இதனால் அவர்களின் உடல்சூடு சமமாக இருந்தது. ஆனால், தற்போது காலநிலை மாறும் போது உடல் சூடு மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்து விட்டது.
உடல் சூடு அதிகரிப்பதால் நம் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக, தலை முடி உதிர்வு, உடலில் நீர் கொப்பளங்கள் வரும். எனவே இவற்றை உணவின் மூலம் எப்படி சரி செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறும் அறிவுரையை தெரிந்துக்கொள்ளுங்கள். காரம் நிறைந்த மற்றும் அதிக மசாலா பொருட்கள் சாப்பிடுவதாலும் உடல் உஷ்ணம் அடையும்.
இப்படி உடல் உஷ்ணம் அதிகரித்தால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை, பித்த வெடிப்பு, சருமம் வறட்சி, சிறுநீர் தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை சரி செய்ய அற்புதாமான வலி ஒன்று உள்ளது. இதற்கு தேவையான பொருட்கள் : விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், குப்பைமேனி கீரை, முடக்கத்தான் கீரை, மூக்கிரட்டை, முருங்கை இலை.
முதலில், குப்பைமேனி கீரை, முடக்கத்தான் கீரை, மூக்கிரட்டை, முருங்கை இலை ஆகியவற்றை எடுத்து, நன்கு விழுதாக அரைத்து, சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் கடுக்காய், அதிமதுரம், கருஞ்சீரகம், மிலக்கரணை ஆகிய பொருள்களை தனித்தனியாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். இதை அனைத்தையும் இப்போது தைலமாக காய்ச்சி எடுக்க வேண்டும்.
தைலம் காய்சுவதற்க்கு, ஒரு கடாயில் எடுத்துள்ள சாறு, பொடி ஆகியவற்றை சேர்த்து அத்துடன் ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் அரை லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் மாதிரி மிதமான சூட்டில் வைத்து காய்ச்சி வடிகட்டி வைக்கவும். முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த தைலத்துடன் சேர்த்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
மேலும், உடலில் உள்ள வறட்சி நீங்கும். இதனை முகத்திற்கு பயன்படுத்தலாம். மாதவிடாய் நேரத்தில் அடிவயிற்றில் தேய்த்தால் வலி குறையும். கால்கள் வெடிப்புஉள்ள இடத்தில் தடவினால் நல பலன் கிடைக்கும். மேலும், முதுகு வலி உள்ள இடங்களில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் அதிக உஷ்ணமிருந்தால் இதை நீராகரத்துடன் சேர்த்து மாதம் ஒருமுறை குடிக்கலாம்.
ஆனால் இருபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் தான் குடிக்க வேண்டும்.