fbpx

BF.7 கொரோனா ஒருவரிடம் இருந்து இத்தனை பேருக்கு பரவுமா..? அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்..!!

தற்போது பரவி வரும் ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் என எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ‘BF.7’ என்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் இந்த புதிய வகை கொரோனா தொடர்பான அச்சம் மேலோங்கி இருப்பதால் மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என மத்திய சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

BF.7 கொரோனா ஒருவரிடம் இருந்து இத்தனை பேருக்கு பரவுமா..? அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்..!!

குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

Chella

Next Post

#தூத்துக்குடி: புதுமணத் தம்பதிகள் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம்..!

Thu Dec 29 , 2022
தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தங்கமுனியசாமி (26) என்பவர், சீதாசெல்வி (24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இருவரும் காதலை வீட்டில் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனா‌ல் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இன்று காலை வழக்கம்போல் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் புகுந்து […]

You May Like