மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் லேப்டாப் ஆகியவை பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்த கண்காட்சியின் நிறைவு விழாவிற்கு புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி “பிள்ளைகளுக்கு வசதி, வாய்ப்புகளைக் கொடுத்தால் அவர்கள் தொழில்நுட்பத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வருவார்கள். நம்முடைய நாடு சிறந்து விளங்க மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்கி, மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டுவர பல முடிவுகளை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குள் மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் லேப்டாப் வழங்கப்படும் என்று கூறினார். மேலும் புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகத்தையும் துவங்க நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. என்று முதல்வர் ரெங்கசாமி கூறினார்.