நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் அறிவிப்புகள்
➥ வருமான வரிக்கான புதிய வரி முறைப்படி, ரூ.12 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை.
➥ தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை ரூ.12 லட்சமாக உயர்வு.
➥ 2023ஆம் ஆண்டில் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு, தற்போது ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
➥ மாத ஊதியம் ரூ.1 லட்சம் வரை பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது.
➥ வருமான வரிச் சட்டம் எளிதாக்கப்படும்
➥ வருமான வரிப் பிடித்தம் எளிதாக்கப்படும்.
➥ மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது.
➥ புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
➥ வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு
➥ நேரடி வரி விதிப்பில் நடைமுறைகள் எளிதாக்கப்படும்.
➥ வீட்டு வாடகைக்கான TDS உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு.
Read More : BIG BREAKING | மின்சார வாகனங்கள், செல்போன்களின் விலை குறைகிறது..!! நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!