புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சௌந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி, தென்சென்னை, கன்னியாகுமரி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை சௌந்தராஜன் பாஜக வேட்பாளராக போட்டியிட இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Read More : Tasmac | மக்களவை தேர்தல் எதிரொலி..!! டாஸ்மாக் கடை திறப்பு நேரம்..!! வெளியான முக்கிய உத்தரவு..!!