Tasmac | மக்களவை தேர்தல் எதிரொலி..!! டாஸ்மாக் கடை திறப்பு நேரம்..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் ஏப்ரல் 19ஆம் தேதியன்று வாக்களிப்பதற்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் 50%-க்கும் மேல் இருப்பு இருக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ளது. மதுக்கடையின் சராசரி விற்பனை, கடந்தாண்டை விட 30%-க்கும் அதிகம் இருக்கக் கூடாது. இருப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். மதுக்கடை, பார்கள் அரசு அனுமதித்த நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : Tasmac | தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

BIG BREAKING | ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை..!! மக்களவை தேர்தலில் போட்டி..?

Mon Mar 18 , 2024
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சௌந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி, தென்சென்னை, கன்னியாகுமரி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை சௌந்தராஜன் பாஜக […]

You May Like