fbpx

பெரும் இழப்பு..!! ’அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை குணா திடீர் மரணம்..!! திரையுலகினர் இரங்கல்..!!

சின்னக்கலைவாணர் விவேக், பாண்டு, சமீபத்தில் மயில்சாமி என தொடர்ந்து நகைச்சுவை நடிகர்களின் மறைவுச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில், மற்றொரு நகைச்சுவை நடிகரின் மறைவு செய்தி ரசிகர்களை மீண்டும் அழ வைத்துள்ளது. விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கோவை குணா. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னரான கோவை குணா, உடல்நலக்குறைவால் காலமானார்.

கொரோனா பரவல் தொடங்கிய நேரத்திலேயே சொந்த ஊரான கோவைக்கே சென்று செட்டில் ஆகி விட்டார். கலக்கப் போவது யாரு மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த கோவை குணா, உடல் நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ரசிகர்களை பல ஆண்டுகள் சிரிக்க வைத்து வந்த கோவை குணா, திடீரென உயிரிழந்த நிலையில், சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், மதுரை முத்து உள்ளிட்ட அவருடன் இணைந்து பணியாற்றிய காமெடி நடிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை குணாவின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு..!! அரசு புதிய உத்தரவு..!!

Wed Mar 22 , 2023
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 ஆக இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 100- ஐ எட்டியுள்ளது. இதனால் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பதற்றப்பட வேண்டாம் எனினும் பாதுகாப்போடு இருப்பது அவசியம் என்று தெரிவித்தார். வாரத்திற்கு 35 ஆயிரம் பேர் […]

You May Like