உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், டாக்டருமான தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவரது சகோதரர் தியாகராஜன். டாக்டரான இவர் சிறுநீரக சிறப்பு நிபுணராக இருந்தார். இந்நிலையில், தியாகராஜனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் விழுப்புரத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் தியாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகு இன்று மாலையில் வீட்டில் இருந்து தியாகராஜனின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. மருதூர் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.