ரயில் பயணத்தின் போது ஆர்டர் செய்யும் உணவுப் பொருட்களுக்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ அல்லது வந்தே பாரத் ரயில்கள் போன்ற ரயில்களில் உணவு ஆர்டர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் பயணத்தின் போது ஆர்டர் செய்யும் உணவுப் பொருட்களுக்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. நீங்கள் டிக்கெட்டுகளுடன் உங்கள் உணவை முன்பதிவு செய்யாவிட்டாலும் கூட சேவை கட்டணம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.. முன்னதாக, ரயில் பயணத்தின் போது டீ அல்லது காபி ஆர்டர் செய்ய ஐஆர்சிடிசி ரூ. 70க்கு மேல் கட்டணம் வசூலித்ததால் பல பயணிகள் அதிருப்தி அடைந்தனர். அதாவது 20 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு தேநீருக்கு இந்திய ரயில்வே 50 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலித்து வந்தது.. இந்த நிலையில் இந்த சேவை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
ஐஆர்சிடிசி வெளியிட்ட சுற்றறிக்கையில் “ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி அல்லது துரந்தோவில் ஆர்டர் செய்யும் உணவுக்கு கூடுதல் சேவைக் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்று இந்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட உணவு விகிதங்களில் ஜிஎஸ்டி விகிதம் அடங்கும், அதாவது கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. ஐஆர்சிடிசியின் முந்தைய விதிமுறைகளின்படி, அந்த நபர் தனது ரயில் டிக்கெட்டுடன் தனது உணவை முன்பதிவு செய்யவில்லை என்றால், பயணத்தின் போது உணவை ஆர்டர் செய்யும் போது கூடுதலாக ரூ 50 செலுத்த வேண்டும், அது வெறும் ரூ.20 கப் டீ அல்லது காபியாக இருந்தாலும் கூட. .
இப்போது, காலை மற்றும் மாலை தேநீருக்கான இந்த சேவைக் கட்டணங்களை ஐஆர்சிடிசி ரத்து செய்துள்ளது. மேலும், ஏதேனும் முன்கட்டண ரயில் தாமதமாக வந்தால், அனைத்து உணவுப் பொருட்களுக்கான கட்டணம் இரு வகை பயணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்..” என்று தெரிவித்துள்ளது.