fbpx

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மிகப்பெரிய சோகம்..!! மாரடைப்பால் திடீர் மரணம்..!!

பஞ்சாப்பில் இன்று காலை ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் மரணமடைந்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் நடைபயணம் செய்த பிறகு ராகுல் காந்தி கடந்த 10-ந்தேதி பஞ்சாப்பை சென்றடைந்தார். அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியா காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின் போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மிகப்பெரிய சோகம்..!! மாரடைப்பால் திடீர் மரணம்..!!

இந்நிலையில், பஞ்சாப்பில் இன்று காலை ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 76. ஜலந்தர் அருகே உள்ள பிலாப்பூர் பகுதியில் ராகுல் காந்தி இன்று காலை நடைபயணத்தை தொடங்கினார். அவருடன் ஜலந்தர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் சிறிது நேரத்திலேயே இறந்தார். ராகுல் காந்தி நடைபயணத்தில் காங்கிரஸ் எம்.பி. உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chella

Next Post

ஜாலிக்கு தடையாக இருந்த குழந்தையை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த கள்ளக்காதலன்…!

Sat Jan 14 , 2023
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி (35) இவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி நந்தினி (25) இவர்களுக்கு பிரவீன்(7) மற்றும் ஜெகநாதன்(3) உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சக்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து […]

You May Like