கேரள மாநிலத்தில் மாடலிங் துறையில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஆயிஷா அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்து சீரியல் நடிகையாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பொதுமக்களின் மனதை கவர்ந்தார்.
அந்த தொடரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. அதில் அவர் ஓரளவு நன்றாக விளையாடி பொதுமக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய காதலரை பற்றி அவர் அறிவித்தார். ஆனால் அவர் யார் என்று அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் தற்சமயம் ப்ரொபோஸ் தினத்திற்காக ஒரு அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் வெட்கத்துடன் ப்ரொபோஸ் தினமாமே என்று பதிவு செய்திருக்கிறார் ஆயிஷா