fbpx

ஆரம்பமே சரியில்ல.. பிக்பாஸ் சீசன் 8 செட்டில் விபத்து..!! மருத்துவமனையில் வடமாநில தொழிலாளி.. என்ன ஆச்சு?

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம் சிட்டி. இங்குதான். இங்கு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். தற்போது பிக்பாஸ் 8 வது சீசனுக்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

மேலும், இந்த சீசனில் போட்டியாளர்களாக, யூடியூபர் TTF வாசன், ஷாலின் சோயா ( குக் வித் கோமாளி பிரபம்), ப்ரீத்தி முகுந்தன் (ஸ்டார் ஹீரோயின்), ஜாக்கி ஆனந்தி (RJ), யூடியூபர் வில்ஸ்பட், நடிகர் ரியாஸ் கான், நடிகை பூனம் பஜ்வா, சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் பிரபலம்), நடிகர் ஜெகன், நடிகர் ரஞ்சித், குரேஷி (குக் வித் கோமாளி), அருண் பிரசாந்த் (பாரதி கண்ணம்மா), அமலா ஷாஜி (யூடியூபர்) ஆகியோர் பங்ககேக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணி நடந்துவந்தது. அப்போது உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். அதன் காரணமாக அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் செட்டில் விபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. உடனடியாக மற்றவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more ; மிகுந்த பணிச்சுமை.. அலுவலக இருக்கையிலே மயங்கி விழுந்து வங்கி ஊழியர் உயிரிழப்பு..!!

English Summary

Bigg Boss 8 season will start on October 6 on Vijay TV. The accident occurred while setting up the sets in Chennai.

Next Post

5 நாட்களில் 'லப்பர் பந்து’ திரைப்படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

Wed Sep 25 , 2024
The information about the collection of Labar Bandhu movie in 5 days worldwide has been released.

You May Like