விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கிறது. அதிலும், கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 18-வது நாளாக தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், இரு வீட்டிற்கும் ஆக்சிஸன் எமர்ஜென்சி டாஸ்கிற்கான கேம் பற்றி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விளக்கப்படுகிறது. குறித்த போட்டியின் படி எந்த வீட்டாளர்கள் அதிக சிலிண்டர்களை பாதுகார்க்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தை ஆரம்பித்த போட்டியாளர்களால் ச்வீட்டிலுள்ள கண்ணாடியொன்று உடைக்கப்படுகிறது. இதையடுத்து இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என அதிரடியாக அறிவிக்கப்படுகிறது.