பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று வரிசையாக இரண்டு போட்டியாளர்களை எலிமினேட் செய்து ட்விஸ்ட் கொடுத்தார் கமல்ஹாசன். அதன்படி, மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும், நேற்று ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ். சீரியல் நடிகை அர்ச்சனா, பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, கானா பாடகர் கானா பாலா, சீரியல் நடிகர் தினேஷ், தொகுப்பாளர் ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
இதுவரை 5 பேர் எலிமினேட் ஆகியுள்ள நிலையில், அதற்கு ஈடுகட்டும் விதமாக 5 பேரை உள்ளே அனுப்பி உள்ளதால், தற்போது வீடு மீண்டும் ஹவுஸ்புல் ஆகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டின் கேப்டன், 6 பேரை தேர்வு செய்து அவர்களை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அந்த வகையில், இந்த வார கேப்டனான பூர்ணிமா யாரை தேர்வு செய்தார் என்பது புரோமோவாக வெளியாகி உள்ளது.
அவர் புதிதாக வந்துள்ள வைல்டு கார்டு போட்டியாளர்களான பிராவோ, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி ஆகியோருடன் விசித்ராவையும் தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதை கவனித்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ன பிளான் பண்ணி பண்றீங்களா என கேட்க, அதற்கு பூர்ணிமாவும் ஆமாங்க பிளான் பண்ணி தான் பண்ணேன் என சொல்லியதால் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கும் இடையே முதல் நாளே மோதல் வெடித்துள்ளது.