fbpx

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்..காதலா இல்லை வீட்டில் பார்த்த பெண்ணா?

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியர்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி அடைந்து இருந்தாலும், லிப்ட், டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக மாறியுள்ளார். 

இந்த நிலையில் கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் 20ம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள கவின் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் ஹீரோவான பிறகே திருமணம் என பேசி வந்த கவின் இப்பொழுது தான் நல்ல வளர்ச்சியில் இருக்கிறார். எனினும் திருமணம் உறுதியாகி இருந்தால் கவின் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் திடீர் திருமணமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Maha

Next Post

கோவையில் தவறவிடப்பட்ட சந்தன மர கடத்தல் லாரியை சேலம் காவல் துறையினர் மடக்கி பிடித்தது எப்படி….?

Tue Aug 1 , 2023
கேரள மாநிலத்திலிருந்து வரலாற்று ரூபாயில் மதிப்பிலான சந்தன கட்டைகளை கடத்திக்கொண்டு திருச்சியை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட கோவை மாவட்டம் போத்தனூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேசிஸ் உதயகுமார் தலைமையிலான காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடிப்பதற்காக கோவை மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.. காவல்துறையினர் மிகவும் விழிப்புடன் இருந்த சூழ்நிலையிலும், காவல்துறையினருக்கு தெரியாமல் எப்படியோ அவர்களுடைய கண்களில் மண்ணை தூவி, அங்கிருந்து […]

You May Like