தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதில் முதலில் தகுப்பாளர் உலகநாயகன் கமலுடன் ஒரு சிறிய ப்ரோமோ மூலம் தொடங்கியது. எப்போதும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வீட்டுற்குள் சென்று வீட்டை பற்றி விவரிப்பார். ஆனால் இந்த முறை தொகுப்பாளர் கமல் மேடையிலே நிற்க மற்றொரு கமல் வீட்டை சுற்றுகிறார். இருவருடைய பேச்சுவார்த்தை ரசிக்க வைத்தது.
அதன் படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் உள்ளது. ஆனால் வாசல் ஒரே வாசல் தான். மேலும் ஒரே கிட்சன் தான். மேலும் இந்த முறை confession ரூம் ஏஞ்சல் இறக்கை இருக்கும் நாற்காலியுடன் இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார் கூல் சுரேஷ். அவருக்கு சுரேஷ் என்று வார்த்தை பொறிக்கப்பட்ட சங்கிலியை கொடுத்துள்ளார் கமல்.