பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். பின்னர், எழுத்தாளர் பவா செல்லதுரை தாமாகவே முன்வந்து வெளியேறினார். இதன் காரணமாக இரண்டாவது வாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை.
இதற்கு அடுத்தபடியாக 3-வது வார எலிமினேஷனில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரான விஜய் வர்மா நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாட்கள் செல்ல செல்ல போட்டி கடுமையாகும்போது தான் ஓப்பன் நாமினேஷன் இருக்கும். ஆனால், இந்த சீசனில் 4-வது வாரத்திலேயே ஓப்பன் நாமினேஷன் வைத்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி இந்த வாரம் ஓப்பன் நாமினேஷனில் மாயா, பிரதீப் ஆண்டனி, மணிச்சந்திரா ஆகியோரை போட்டியாளர்கள் வரிசையாக நாமினேட் செய்துள்ளனர்.
இதில் மணி, ரவீனாவை சந்தோஷமாக வைத்திருப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறி ஐஷூ நாமினேட் செய்துள்ளார். அதேபோல் யுகேந்திரன் மாயாவை நாமினேட் செய்தபோது, அவர் மாயமாவே இருப்பதாக கூறி நாமினேட் செய்துள்ளார்.