பீகாரில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை கண்டுபிடித்து மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றி வந்த 10 நபர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர் மேலும் அவற்றிலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் பீகார் மற்றும் கொல்கத்தா சிறப்பு காவல் படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்த அங்கு அதிரடி சோதனையில் இறங்கிய காவல்துறையினர் அந்த தொழிற்சாலையில் வேலை செய்த பத்து நபர்களை கைது செய்து இருக்கின்றனர்.
சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆயுத தொழிற்சாலை இயங்கி வருவதாக பிகார் மாநில போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் கொல்கத்தா போலீசார் உடன் இணைந்து தீவிரமான தேட சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பீகாரின் ககாரியா மற்றும் சமஸ்திபூரில் இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலைகளை போலீசார் சீல் வைத்தனர். இது தொடர்பாக அந்த தொழிற்சாலையில் வேலை செய்த 10 பேரையும் கைது செய்து இருக்கின்றனர். மேலும் அவற்றிலிருந்து பத்து பிஸ்டல்கள் ஒரு துளையிடும் சாதனம் மற்றும் ஒரு லேத் மிஷின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.