மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வாங்க கூடாது அப்படி வாங்கினால் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கினால் பில் வழங்கும் விதத்தில் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது இதற்காக ரெயில்டெல் என்ற நிறுவனத்திற்கு சுமார் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கி இருக்கிறது இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 5000 டாஸ்மாக் கடைகள் கணினிமயமாக்கப்பட இருக்கிறது.
இதன் மூலமாக, மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாகும். மதுவிற்கு பில் வழங்குவதால் அதிக விலைக்கு விற்கப்படுவது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை கவனித்து வந்த போது அவர் ஒரு மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கியதாக தமிழ்நாடு முழுவதிலும் புகார்கள் எழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.