ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு..! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!.!

தமிழகத்தில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகலில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது. நடப்பாண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் இந்தாண்டு கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

tamil nadu school teachers, தமிழக ஆசிரியர்கள் பணி நியமனம்; இப்படியொரு  அதிரடி உத்தரவு! - madras hc accepts tn govt recommendation in mid year  retirement teachers reappointment - Samayam Tamil

இந்நிலையில் தற்போது கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களிடம் பேரம் பேசும் அரசுபள்ளி ஆசிரியர்கள்! -  விளங்குமா சமூகம்?

அந்த வகையில், அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 11ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 14, 15ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு..! எப்போது தெரியுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

Fri Jul 1 , 2022
சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய […]
எம்எல்ஏ-வின் ’கடுக்காய்’ கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த அமைச்சர்..!! பேரவையில் சிரிப்பலை..!!

You May Like