தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் காலம்காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றில் மோசடிகள் நடப்பதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன.
இதை தடுப்பதற்காக ஆலோசித்த தமிழ்நாடு அரசு, பொருட்கள் எடை அளவு, மக்களுக்கு கொடுக்கப்படும் கம்ப்யூட்டர் பில்லில் இடம்பெறும் வகையில் மெஷின்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை மண்டலத்தில் உள்ள நியாய விலை அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார்.
விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகைப் பதிவு, எடைத்தராசில் பொருளை எடைபோட்டு விற்பனை முனைய இயத்திரத்துடன் இணைத்து ரசீது போடுதல் உள்ளிட்ட விவரங்களை விற்பனையாளரிடமும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் ரேஷன் பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்தும் கேட்டறிந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சோதனை முறையில் இந்தக்கடைகளில் எடைத்தராசுடன் பில் மெஷின் இணைக்கப்பட்டு, மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட உள்ளன.
மற்றொரு செய்தி என்னவென்றால், வரும் 29 ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வரும் 29ஆம் தேதியான சனிக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும். அதனைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் வரும் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.