‘பறவை காய்ச்சல்’ என அழைக்கப்படும் நோய்த் தொற்று பறவைகள், பசுக்கள் மற்றும் பிற விலங்குகளில் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். ஜனவரி 1, 2025 முதல், இந்தியாவின் பல மாநிலங்களில் 7000க்கும் மேற்பட்ட கோழிகள் பல முட்டைகளுடன் சேர்த்து அழிக்கப்பட்டுள்ளன.
கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் அச்சம் நிலவுவதால், ஆந்திரப் பிரதேச அரசு உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆந்திராவில் உள்ள ஐந்து கிராமங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதை அடுத்து, தெலங்கானா மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு பகுதிகள் உயிரியல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கோழி கடைகளும் மூடப்பட்டன. பறவைக் காய்ச்சல் பீதியால் கோழி பிரியர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகளை வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் அடுத்தடுத்த மாநிலங்களிலும் பரவி வரும் சூழலில், நோய் பரவலை கட்டுப்படுத்த கர்நாடக சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more : இந்த அறிகுறிகள் இருந்தால்.. மனதிற்கு ஓய்வு தேவை என்று அர்த்தம்..!! அலட்சியம் வேண்டாம்..