Bird flu: மேற்கு வங்காளத்தில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, இந்தியாவில் பறவைக்காய்ச்சலின் 2வது வழக்கு பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் நான்கு வயது குழந்தைக்கு H9N2 வைரஸால் பறவைக் காய்ச்சலுடன் மனித தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4வயது குழந்தைக்கு பிப்ரவரியில் தொடர்ந்து கடுமையான சுவாசப் பிரச்சினைகள், அதிக காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சனை ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சிகிச்சையின் பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தையின் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கோழிப்பண்ணையின் வெளிப்பாடு இருந்ததாகவும், இருப்பினும் அவரது குடும்பத்தினர் மற்றும் பிற தொடர்புகளில் சுவாச நோயின் அறிகுறிகள் எந்த நபரும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது இந்தியாவில் இருந்து H9N2 பறவைக் காய்ச்சலின் இரண்டாவது மனித நோய்த்தொற்று ஆகும். முன்னதாக 2019 இல் முதல் வழக்கு பதிவானது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் கோழிகளில் பரவுவதால் மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஐநா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: BREAKING | தமிழ்நாட்டில் இரவோடு இரவாக உயர்ந்த சுங்கக் கட்டணம்..!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!