fbpx

அச்சம்… தமிழகத்தில் பறவை காய்ச்சல்…! இதை எல்லாம் வாங்க தடை…! ஆட்சியர் அதிரடி நடவடிக்கை…!

பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனம், தீவன மூலப்பொருட்கள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள மாநிலம்‌ ஆலப்புழா மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி. ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தாக்குதல்‌ எதுவும்‌ இல்லை.

பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ எண்பது பறவை இனங்களை தாக்கும்‌ ஒரு வைரல்‌ தொற்றுநோய்‌. இந்த நோய்‌ ஆங்கிலத்தில்‌ A Vian influenza மற்றும்‌ Bird Flu என அழைக்கப்படுகிறது. இந்நோய்‌ கோழி, வாத்து, வாண்கோழி, நீர்ப்பறவைகள்‌ மற்றும்‌ வணப்பறவைகள்‌ ஆகியவற்றை முக்கியமாகத்‌ தாக்கும்‌. பறவைக்காய்ச்சல்‌ வைரஸ்‌ கிருமிகள்‌ பல வகைகள்‌இருந்தாலும்‌ H5N1 என்ற வகை வைரஸ்‌ கிருமி அதிக வீரியம்‌ வாய்ந்தது. நோய்‌ பாதித்த பண்ணைகளில்‌ இறந்த கோழிகள்‌, கோழிக்கழிவுகள்‌, பண்ணை உபகரணங்கள்‌ மற்றும்‌ கோழித்தீவனம்‌ மூலமாக இந்நோய்‌ பரவுகிறது.

இந்நோய்க்கு சிகிச்சை எதுவும்‌ இல்லை.நோய்‌ வராமல்‌ தடுக்க நோய்‌ தடுப்பு முறைகளையும்‌, உயிர்‌ பாதுகாப்பு முறைகளையும்‌ பின்பற்ற வேண்டும்‌. கால்நடை பாரமரிப்புத்துறை மூலம்‌ ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கோழி பண்ணைகள்‌, வெள்ளோடு பறவைகள்‌ சரணாலயம்‌ மற்றும்‌ புறக்கடைக்‌ கோழிகளை நேரில்‌ பார்வையிட்டு மாதிரிகள்‌ சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள்‌ அமைக்கப்பட்டு தயார்‌ நிலையில்‌ உள்ளது. பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தொற்று ஏற்படாமலிருக்க ஈரோடு மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள்‌ கீழ்க்கண்ட தடுப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்.

Vignesh

Next Post

TNPSC புதிய அப்டேட்...! வரும் 12-ம் தேதி தேர்வு...! ஹால் டிக்கெட் வெளியீடு...! முழு விவரம் இதோ...

Sat Nov 5 , 2022
மருத்துவத்துறையில் தொழில் ஆலோசகர் பதவி, குடிசை மாற்று வாரிய சமூக ஆர்வலர் பதவிக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப்பணியில் அடங்கிய சமூக ஆர்வலர் ஆகியப்பதவிகளுக்கான கம்ப்யூட்டர் மூலம் தேர்வு வரும் […]

You May Like