கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த BF.7 கொரோனா இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவை காய்ச்சல் காரணமாக 6,000 பண்ணைக் கோழிகள் அழிக்கப்பட்டன. இன்ப்ளுயென்சா எனப்படும் வைரஸ் மூலம் பறவைகளுக்கு ஏற்படும் இந்த காய்ச்சல், அதனை உண்ணும் மனிதர்களுக்கும் தொற்றுகிறது. கேரள எல்லை மாவட்டமான கோவைதான் தமிழகத்தின் கறிக்கோழி மொத்த பண்ணை என்பதால் அனைத்து பண்ணை உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.