fbpx

மனிதர்களுக்கு பரவும் பறவை காய்ச்சல்.!! H5N1 வைரஸ் தொற்றால் பலியான வியட்நாம் மாணவன்.!!

வியட்நாம் நாட்டில் H5N1 பறவை காய்ச்சல் வைரஸ் தொற்றால் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வியட்நாம் நாட்டில் பறவை காய்ச்சல் தொற்று மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 21 வயது பல்கலைக்கழகம் மாணவர் பறவை காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்ததை தொடர்ந்து பறவை காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துமாறும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

வியட்நாம் நாட்டிலுள்ள ந்ஹ ட்ராங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 21 வயது மாணவன் H5 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று காரணமாக மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டு சுகாதாரத்துறை மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டு துறை பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கான் ஹோ மாகாணத்தில் உள்ள சுகாதாரத் துறையிடம் கேட்டுள்ளது.

H5N1 என்ற வைரஸ் மூலம் பறவைகளுக்கு பரவக்கூடிய காய்ச்சலானது அமத்துடன் தொடர்புடைய மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. 1997 ஆம் வருடம் இந்த காய்ச்சல் முதல் முதலாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பறவை காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு 850 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 50 சதவீதம் வேர் நோய் தொற்றால் இறந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சலால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் எகிப்து மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவருக்கு சளி இருமல் வயிற்றுப்போக்கு தலைவலி உடல் வலி மற்றும் தசை வலி மூக்கில் நீர் ஒழுகுதல் சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவர்கள் அனுப்புமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தி இருக்கிறது.

Read More: Rain | சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளு குளு அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!!

Next Post

இனி இவர்களுக்கும் ரூ.1,000 மகளிர் உதவித்தொகை..! உதயநிதி ஸ்டாலின் சொன்ன சர்ப்ரைஸ்..!

Tue Mar 26 , 2024
18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் வாக்கு […]

You May Like