fbpx

இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர்…! மொத்தம் 18 அமர்வு… 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும்…!

இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, இரு அவைகளின் அனைத்துக் கட்சி தலைவர்களுடனான அரசின் கூட்டம் நேற்று நடைபெற்றது.  நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று கூறினார். இந்த கூட்டத்தொடர்  26 நாட்களில் மொத்தம் 18 அமர்வுகள் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில், தற்காலிகமாக 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும் என்று கூறிய அவர், அவற்றில் 14 ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

நடைமுறை விதிகளின் கீழ் அனுமதிக்கப்படும் எந்தவொஅவையில் விவாதிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார். மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் வழக்கமான சட்டமியற்றும் பணிகள் மட்டுமின்றி, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களையும் விவாதிக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

கூட்டத்தில் பாஜக  தவிர, காங்கிரஸ், திமுக, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம், பகுஜன் சமாஜ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமாஜ், சேதியவாத காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 35 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Also Read: “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!

Vignesh

Next Post

சோகம்.. குரங்குகள் தூக்கி வீசியதால் உயிரிழந்த 4 மாத குழந்தை..

Mon Jul 18 , 2022
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், தந்தையிடம் இருந்த 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் தூக்கி வீசியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரேலியின் துங்கா பகுதியில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் கூரையில் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்று கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திடீரென கூரை மீது ஏறி வந்த குரங்குகள் […]
குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ஆசிரியர்..!! 500 அடி பள்ளத்திலிருந்து சடலமாக மீட்பு..!!

You May Like