கேரளாவில் மரம் வெட்டப்பட்டதால் அதில் இருந்த ஏராளமான பறவைகள் உடல் நசுங்கி இறந்துகிடந்த சம்பவம் காண்போர் நெஞ்சை கலங்கடிக்கிறது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருரங்கடியில் உள்ள விகே பாடியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காண்போரை கலங்கடிக்கிறது.. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் தளத்திற்கு அருகே, மண் அள்ளும் இயந்திரம் தாங்கள் கூடு கட்டியிருந்த மரத்தை கீழே தள்ளும் போது, பல பறவைகள் புறப்படுவதைக் காண முடிந்தது. இருப்பினும், பறக்க முடியாத சில பறவைக் குஞ்சுகள் அல்லது பறக்க முடியாத பிற பறவைகள் நசுங்கி இறந்தன. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது..
இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், “அனைவருக்கும் வீடு தேவை. நாம் எவ்வளவு கொடூரமானவர்களாக மாறிவிட்டோம். ஜேசிபி இயந்திரம் மூலம் மரம் வேரோடு பிடுங்கப்பட்டதால் பறவைகள் நசுங்கி இறந்ததை வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை பார்த்த பலரும் வருத்தம் தெரிவித்ததுடன், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.. ட்விட்டர் பயனர் ஒருவர் “ மனிதர்கள் தங்கள் வரம்புகளை கடக்கிறார்கள், மக்கள் எப்படி இதயமற்றவர்களாக இருக்க முடியும்..? சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் கருத்து தெரிவிக்கையில், “ பறவைகள் தங்கள் குழந்தைகளை பறக்க முடியாத கூட்டில் வைத்திருப்பதால் அவைந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டார்கள். இது மிகவும் கொடூரமான மற்றும் அவநம்பிக்கையான செயல்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
இதனிடையே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் கூடு கட்டும் பருவம் முடியும் வரை விரிவாக்கம் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.. இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரப்பூர்வ அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர், ஜேசிபி ஓட்டுநரை இயக்கியவர் கைது செய்யப்பட்டார்.