fbpx

மிக கவனம்… ஐஎஸ்ஐ முத்திரை இல்லை என்றால் உடனே இந்த செயலி மூலம் புகார் தெரிவிக்கவும்…!

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு வந்த புகாரை அடுத்து, பிஐஎஸ் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் மின்தேக்கிகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மாற்று மின்னோட்ட மோட்டார் மின்தேக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் பற்றி, பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரியிலோ, BIS CARE APP செயலி மூலமோ அல்லது cnbo2@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தாமதமாக வந்த டெலிவரி ஊழியர்..!! ஆரத்தி எடுத்து வரவேற்ற கஸ்டமர்..!! வீடியோ உள்ளே..!!

Sun Oct 9 , 2022
தாமதமாக வந்த உணவு டெலிவரி ஊழியருக்கு வாடிக்கையாளர் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உணவு டெலிவரி என்பது மிகவும் பிரபலமான ஒரு வேலையாக மாறிவிட்டது. தற்போது அனைவரும் வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்து கொள்கிறார்கள். அதோடு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் முதல் அனைத்து விதமான பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து, வீட்டு வாசலிலேயே […]
தாமதமாக வந்த டெலிவரி ஊழியர்..!! ஆரத்தி எடுத்து வரவேற்ற கஸ்டமர்..!! வீடியோ உள்ளே..!!

You May Like