இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 மில்லி) குடிநீர் பாட்டில்கள் மற்றும் 4 அட்டைப் பெட்டிகளில் ஐஎஸ்ஐ முத்திரை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த குற்றத்திற்காக இரண்டு வருட சிறைதண்டனையோ அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.ஐஎஸ்ஐ முத்திரைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால் இந்திய தர நிர்ணய அமைவன தென் மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு தெரு, தரமணி, சென்னை – 13 என்ற முகவரியிலோ BIS Care App என்ற செயலிலோ என்ற cnbo2@bis.gov.in மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். .
மேலும் விவரங்களுக்கு 044-2254 1984 என்ற சென்னை அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது www.bis.gov.in என்ற இணையதளம் முகவரியிலோ அறிந்து கொள்ளலாம் என இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை -2 தலைவர் பவானி தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.