fbpx

ஆந்திராவில் பாஜக கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும்…! பிரசாந்த் கிஷோர் கருத்து…!

ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி மிக பெரிய அளவில் தோல்வியை தழுவுவார் என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. ஆந்திரா அரசியல் கள நிலவரம் குறித்து கூறிய பிரசாந்த் கிஷோர்; ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் 67 தொகுதிகளில் வெற்றி பெறும். தெலுங்கு தேசம், பா.ஜ.க, மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜெகன் மோகன் பெரிய அளவில் தோல்வியை தழுவுவார். ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 15 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்புவதாக கூறி உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது. ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நினைக்கிறார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை என கூறியுள்ளது ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vignesh

Next Post

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி! ; விண்ணப்பங்களை கோரும் BCCI

Tue May 14 , 2024
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ திறந்துள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து, கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி […]

You May Like