fbpx

இறையாண்மை பற்றிய கருத்துக்கு‌ விளக்கம் அளிக்க வேண்டும்…!சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…!

இறையாண்மை குறித்து சோனியா காந்தியின் கருத்து குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதற்கான இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடந்த ஆறாம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி தேர்தல்‌ பிரசார கூட்டத்தில்‌, கலந்து கொண்டு பேசிய போது
கர்நாடக மாநிலத்தின் நற்பெயருக்கும்‌,
இறையாண்மைக்கும்‌,
ஒருமைப்பாட்டுக்கும்‌ அச்சுறுத்தலை
ஏற்படுத்த நினைக்கும்‌ யாரையும்‌
காங்கிரஸ்‌ அனுமதிக்காது என கூறியிருந்தார்.

சோனியா காந்தியின் கருத்து நாட்டில்‌ பிரிவினையை ஏற்படுத்தும்‌ வகையில்‌ இருப்பதாகவும்‌, அவர்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர்‌ தேர்தல்‌ ஆணையத்தில்‌ புகார்‌ அளித்தனர்‌. இறையாண்மை குறித்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Vignesh

Next Post

சர்ச்சைக்குரிய "தி கேரளா ஸ்டோரி" படத்திற்கு தடை...! முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு...!

Tue May 9 , 2023
மேற்கு வங்க மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்தது. திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் ISIS முகாம்களுக்கு கடத்தப்படும் மூன்று பெண்களின் வேதனையை விவரிக்கும் திரைப்படத்திற்கு முதலில் மேற்கு வங்க அரசு தடை செய்துள்ளது. பா.ஜ.க ஆளும் மத்தியப் […]

You May Like